deepamnews
இலங்கை

மின் கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு  சம்பிக ரணவக்க கடிதம்  

எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் மின் கட்டண அதிகரிப்பு குறித்து சர்வதேச நாணய நிதியத்துக்கு பாட்டளி சம்பிக ரணவக்க கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தின் மூலம், எரிபொருள் விலை சூத்திரம் மற்றும் மின் கட்டண அதிகரிப்பு என்பன சர்வதேச நாணய நிதியத்தின் அளவுகோல்களுக்கு அமைவாக உள்ளதா என சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பொருளாதார ஸ்திரப்படுத்தல் குழுவின் தலைவர் என்ற ரீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் பாட்டளி சம்பிக ரணவக்க இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்.

சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அளவுகோல்களுக்கு அமைய இலங்கை மின்சார சபை பெப்ரவரி 15ஆம் திகதி முதல் மின் கட்டணத்தை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டு நிதி நிலைப்படுத்தலுக்குப் பதிலாக திறைசேரி, அரச வங்கிகள் மற்றும் மத்திய வங்கி, எண்ணெய் கூட்டுத்தாபனம் மற்றும் இலங்கை மின்சார சபை என்பன தனித்தனி அலகுகளாக ஸ்திரப்படுத்தப்பட்டதன் விளைவுகளை நாட்டின் பொருளாதாரமும் மக்களும் தற்போது உணரத் தொடங்கியிருப்பதாக அவரது கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைவதற்கு உண்மைக்கு புறம்பான வரிகள் கொண்ட எரிபொருள் மற்றும் மின்சார முறைமையே நிச்சயமாக காரணமாகும். அது தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்தின் மீது பொறுப்பு சுமத்தப்படுவதை தவிர்க்க முடியாது.

பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக இலங்கையின் முழு கடன் நிலைப்படுத்தும் வேலைத்திட்டமும் சீர்குலைவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

போதைப் பொருள் அற்ற தேசத்தை உருவாக்குவோம் எனும் செயல் திட்டம் ஆரம்பம்.

videodeepam

மருத்துவமனை சென்றால் வீடு திரும்புவோமா என்ற அச்சத்தில் மக்கள் – அங்கஜன் தெரிவிப்பு!

videodeepam

ரயில் கட்டணத்தில் மாற்றம் –  பந்துல குணவர்தன தெரிவிப்பு

videodeepam