deepamnews
இலங்கை

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக்க முயற்சி – உதவி கோரப்பட்டதாக சன்ன ஜயசுமன தெரிவிப்பு

மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவு கோரியதாக  சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அரசாங்கமே வீடு செல்ல வேண்டும், அதனை விடுத்து பிரதரை மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காது என்றும் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

சுதந்திர மக்கள் கூட்டணியின் எந்தவொரு உறுப்பினரும் பிரதமரை மாற்றும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவளிக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன்,  முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஓய்வு பெற்று , வீட்டில் இருப்பதே மிகவும் பொறுத்தமானது என்றும் , அவ்வாறு செய்தால் மாத்திரமே நாட்டுக்காக செய்துள்ள சேவைகளுக்காக பெற்றுள்ள நற்பெயரை அவரால் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்றும் சன்ன ஜயசுமண சுட்டிக்காட்டியுள்ளார்.

Related posts

மஹிந்த தலைமையில் பொதுஜன பெரமுன சந்திப்பு – தேர்தல் தொடர்பில் கலந்துரையாடல்

videodeepam

அடுத்த வருட இறுதியில் பணவீக்கம் 5 சதவீதமாக குறையும் – மத்திய வங்கி ஆளுநர் அறிவிப்பு

videodeepam

இலங்கைக்கு 10 வருட கால அவகாசம் வழங்குமாறு கடன் வழங்கும் நாடுகளிடம் பாரிஸ் கிளப் முன்மொழிவு

videodeepam