deepamnews
இலங்கை

ஜனாதிபதியுடனான பேச்சுவார்த்தை தோல்வி – மீண்டும் போராட்டம் நடத்தப்படுமென தொழிற்சங்க கூட்டமைப்பு எச்சரிக்கை

ஜனாதிபதி மற்றும்  தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கு இடையிலான பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது.

இதனால் தமது தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன ரட்ணசிங்கம் தெரிவித்துள்ளார்.

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக சம்பளம் பெறுவோரிடம் ஜனவரி மாதம் முதல் 36 சதவீத வரை வரி அறவிடும் கொள்கைக்கு எதிராக தொழில் வல்லுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையிலேயே,  நேற்று மாலை அது தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்றது.

இது தொடர்பில் வைத்தியர் வாசன் ரட்ணசிங்க  தெரிவிக்கையில் ,

நாட்டில் தற்போதுள்ள நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு அரச வருமானம் அதிகரிக்கப்பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்கின்றோம். இதற்காக சகல துறையினரும் வரி செலுத்த வேண்டும். ஆனால் அந்த வரி நியாயமானதாக இருக்க வேண்டும். இது தொடர்பான எமது முன்மொழிவுகளையும் ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தினோம்.

இதன் போது , ‘நாட்டின் தற்போதைய நிதி நெருக்கடிகளுக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டியது அத்தியாவசியமானது. எனவே அவர்களது சில நிபந்தனைகளை நடைமுறைப்படுத்த வேண்டியுள்ளது.’ என திறைசேரி செயலாளர் , ஜனாதிபதியின் பொருளாதார ஆலோசகர் உள்ளிட்டோரால் தெரிவிக்கப்பட்டது.

எவ்வாறிருப்பினும் அவர்கள் கூறுவதைப் போன்று வரி வசூலிப்பானது அசாதாரணமாகக் காணப்பட்டால் அதனை எம்மால் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதை தெளிவாகக் குறிப்பிட்டோம்.

எனவே அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உட்பட தொழிற்சங்கங்களின் தொழில் வல்லுனர்கள் சங்கம் என்பன தொடர்ச்சியான போராட்டங்களில் ஈடுபடத் தீர்மானித்துள்ளன. இனிவரும் போராட்டங்கள் கடந்த காலங்களைப் போன்றல்லாது , தீவிரமடையும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.

Related posts

நிதியை விடுவிக்கக் கோரி நிதி அமைச்சருக்கு தேர்தல் ஆணையம் கடிதம்

videodeepam

இலங்கையில் குறைவடைந்த மதுபான பாவனை

videodeepam

2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் எதிர்வரும் 8ஆம் திகதி நாடாளுமன்றில் சமர்பிப்பு

videodeepam