deepamnews
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலிற்கான போராட்டத்தை தோற்கடிக்க முடியாது என்கிறார் அனுரகுமார திசநாயக்க

மக்களின் சிறந்த எதிர்காலத்திற்காக  உள்ளூராட்சிதேர்தலிற்கான போராட்டத்தில் எந்த வழிமுறையையும் பயன்படுத்தி வெற்றிபெறுவோம் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சிதேர்தலை அரசாங்கம் நடத்தச்செய்வதற்கான போராட்டத்தை கண்ணீர் புகைபிரயோகத்தின் மூலம் தடுக்க முடியாது பின்வாங்க முடியாது.

மருந்துகள் இன்றி மடியும் மக்களிற்காக வேலைவாய்ப்பின்றி காணப்படும் இளைஞர்களிற்காக துன்பத்தில் சிக்குண்டுள்ள விவசாயிகள் மீனவர்கள் உழைக்கும் மக்களிற்காக நாங்கள் உள்ளுராட்சி சபை தேர்தலிற்கான இந்த போராட்டத்தில் வெற்றிபெறுவோம்.

ஊழல் இல்லாத போதைப்பொருள் இல்லாத பொதுமக்கள் பணம் கொள்ளையடிக்கப்படாத நாட்டை உருவாக்குவதற்கான போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்,இது இந்த தலைமுறையின் கடமை. எந்த வழிமுறையையும் பயன்படுத்தி இந்த போராட்டத்தில் நாங்கள் வெற்றிபெறுவோம்.

அனைத்து தொழில்சார் துறையினர் படையினர் விவசாயிகள் மீனவர்கள் உட்பட அனைவரும் தங்களது ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்காக தேசிய மக்கள் சக்தியின் பின்னால் அணிதிரளவேண்டும்.

நாட்டிலிருந்து குடும்ப ஆட்சியை அகற்றுவதற்காக பெருமளவு மக்கள் தேசிய மக்கள் சக்தியுடன் இணைவதால் அச்சமடைந்துள்ள அரசாங்கம் உள்ளூராட்சி  தேர்தலை ஒத்திவைப்பதற்காக சதிசெய்கின்றது.

தேர்தலை ஒருமாதத்திற்கோ அல்லது அதற்கு மேற்பட்ட காலத்திற்கோ ஒத்திவைக்க ரணில்விக்கிரமசிங்கவினால் முடியாது. மேலும் அதிகளவான பொதுமக்கள் எங்களுடன் இணைந்துகொள்வார்கள் என அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

videodeepam

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

videodeepam

வடக்கு கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு அனுமதி – இதுவரை தீர்மானிக்கவில்லை என்கிறார்  டக்ளஸ் தேவானந்தா

videodeepam