deepamnews
இலங்கை

பதவி விலகலை மறுக்கிறார் பிரதமர் தினேஷ் குணவர்தன – உண்மைக்கு புறம்பானது எனவும் தெரிவிப்பு

தாம் இராஜினாமா செய்யவுள்ளதாக வெளியான தகவல்கள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இவை அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை சீர்குலைப்பதற்கான சதித்திட்டம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவை மீண்டும் பிரதமராக நியமிப்பதற்கு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் சிலர், தமது உறுப்பினர்களிடம் ஆதரவைக் கோரியுள்ளதாக சுதந்திர மக்கள் கூட்டணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர், பேராசிரியர் சன்ன ஜயசுமன நேற்று முன்தினம் தெரிவித்த கருத்திற்கு பதிலளிக்கும் வகையிலேயே பிரதமர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதனிடையே, தேர்தலை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் செய்த அரச ஊழியர்களை மீண்டும் சேவைக்கு அழைப்பது தொடர்பில் எதிர்வரும் 3ஆம் திகதி தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவிப்புக்கு பின்னர் தீர்மானிக்கப்படும் எனவும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

நாட்டில் போஷாக்கு குறைபாட்டுடன் 30,000 சிறுவர்கள் அடையாளம்

videodeepam

ஏனைய கடனாளிகளுடன் சேர்ந்து, சீனா நம்பகமான உத்தரவாதங்களை வழங்க வேண்டும் – அமெரிக்கா வலியுறுத்தல்

videodeepam

தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு!

videodeepam