deepamnews
இலங்கை

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் – இலங்கை தொடர்பில் மார்ச் 24 இல் அவதானம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 52 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன், ஐ.நா மனித உரிமைகள் குழு கூட்டமும் இன்றைய  தினம் ஆரம்பமாகவுள்ளது.

மார்ச் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் குழு கூட்டத்தின் போது இலங்கை விவகாரங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்படவுள்ளது.

மார்ச் மாதம் 8 ஆம் திகதியும் 9 ஆம் திகதியும் இலங்கை தொடர்பிலான கலந்துரையாடல்கள் இடம்பெறவுள்ளன.

இம்முறை ஐ.நா மனித உரிமை பேரவையின் கூட்டத்தொடரில் தான் கலந்து கொள்ளவில்லை எனவும் இலங்கை சார்பில் அதிகாரிகள் குழுவொன்று ஜெனிவா செல்லவுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சட்ட மா அதிபர் திணைக்களம், வெளிவிவகார அமைச்சு, ஜனாதிபதி செயலகம் மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் குழுவொன்று இலங்கை சார்பில் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், இலங்கை தொடர்பிலான பிரேணைகள் இம்முறை கொண்டுவரப்பட மாட்டாது எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியீடு

videodeepam

நாட்டின் பல பகுதிகளில் இன்று மழை பெய்யும் வாய்ப்பு

videodeepam

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

videodeepam