deepamnews
இலங்கை

அரசியல் சட்டத்தரணி என விமர்சனம் – ஜனாதிபதியின் கருத்துக்கு சட்டத்தரணிகள் சங்கம் கண்டனம்

சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸ் தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அண்மையில் தெரிவித்த கருத்துக்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த வாரம் நாடாளுமன்றில் உரையாற்றிய போது சிரேஷ்ட சட்டத்தரணி சாலிய பீரிஸுக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்ததோடு, அரசியல் சட்டத்தரணி எனவும் குறிப்பிட்டிருந்தார்.

ஜனாதிபதி இவ்வாறு அழைத்தமையானது கவலைக்குரிய விடயம் எனவும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் அறிவித்துள்ளது.

Related posts

தொலைபேசி, துணை உதிரிப்பாகங்களின் விலைகளும் உயர்வு!

videodeepam

தாங்கள் நினைத்தபடி கடமைக்கு செல்லும் மாநகர உத்தியோத்தர் – கண்டுகொள்ளாத நிர்வாகம்

videodeepam

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலய வருடாந்த திருவிழா நாளை – ஏற்பாடுகள் அனைத்தும் நிறைவு

videodeepam