deepamnews
இலங்கை

உள்ளூராட்சி தேர்தலுக்கான நிதியை விடுவிக்க வலியுறுத்தல் 

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை நடத்துவதற்காக இவ்வாண்டுக்கான வரவு – செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதியை விடுவிக்குமாறு திறைசேரிக்கு உத்தரவிடுமாறு கோரி ஐக்கிய மக்கள் சக்தி தாக்கல் செய்துள்ள மனுவை வரும் வெள்ளியன்று பரசீலனைக்கு எடுத்துக் கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவை , முன்னதாக தேர்தல் இடம்பெறும் என அறிவிக்கப்பட்ட தினமான மார்ச் 9ஆம் திகதிக்கு முன்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளுமாறு மனுதாரர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய விடுத்த கோரிக்கைக்கு அமைய நீதிமன்றம் இதனை அறிவித்துள்ளது.

உயர் நீதிமன்ற நீதியரசர்களான எஸ்.துரைராஜா, யசந்த கோதாகொட மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோரால் இந்த மனு நேற்று திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அதற்கமையவே இதனை மீண்டும் மார்ச் 3ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதியின் விஷேட உரை இன்று.

videodeepam

பாலர் பாடசாலையில் மதச் செயற்பாடு – பிரதேச செயலகத்தின் தலையிட்டால் நிறுத்தம்

videodeepam

வாகனங்களின் விலைகளில் வீழ்ச்சி

videodeepam