deepamnews
இலங்கை

பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி வெளியீடு

பயணிகளுக்கும், பண்டங்களுக்குமான பொதுப் போக்குவரத்தை அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தும் விசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையெழுத்திட்டுள்ளார்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த விசேட வர்த்தமானியின் ஊடாக, நாட்டில் ஏதேனுமொரு துறைமுகத்தில் இருந்து உணவுப் பொருட்கள், பானம், நிலக்கரி, எண்ணெய், எரிபொருள் என்பவற்றை வெளியேற்றுதல், கொண்டுசெல்லல், தரையிறக்குதல், களஞ்சியப்படுத்தல், விநியோகித்தல், அகற்றுதல் என்பதற்காக தெருக்கள், பாலங்கள், மதகுகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொடரூந்து பாதைகள் உட்பட தெரு மூலமான, தொடரூந்து மூலமான அல்லது வான்வழி மூலமான போக்குவரத்துச் சேவைகளுக்கான வசதிகளை வழங்குதலும், பேணுதலும் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அத்தியாவசிய சேவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.

சுங்கக் கட்டளைச் சட்டத்தின் அடிப்படையில் இந்த வர்த்தமானி அறிவித்தல் தயாரிக்கப்பட்டுள்ளது.

Related posts

வளி மாசுபாட்டு அளவு வழமைக்கு திரும்பியுள்ளது –  தேசிய கட்டட ஆய்வு நிறுவகம் அறிவிப்பு

videodeepam

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியீடு

videodeepam

சிவனொளிபாத மலையடிவாரத்தில் லிஸ்டீரியா நோயால் பெண் ஒருவர்  உயிரிழப்பு

videodeepam