deepamnews
இலங்கை

ஜனாதிபதி ரணிலுடன் பாகிஸ்தான் கடற்படை தளபதி சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி மொஹம்மட் அம்ஜத் கான் நியாஸி நேற்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது, இலங்கைக்கும் – பாகிஸ்தானுக்கும் இடையிலான கடல்சார் பிராந்திய ஒத்துழைப்பை வலுப்படுத்துவது மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவினை மேலும் மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

அத்துடன்,பாகிஸ்தான் கடற்படை தளபதியினால் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவு பரிசு ஒன்றும் வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

Related posts

வரவு செலவு திட்டத்திற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் நாடு திரும்புகின்றார் பசில்

videodeepam

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட ஜனாதிபதியை வலியுறுத்தவில்லை என்கிறது பொதுஜன பெரமுன

videodeepam

மன்னாருக்கு விஜயம் செய்த இலங்கைக்கான அமெரிக்க துணைத் தூதர் டக் சோனெக்  சிவில் அமைப்புக்களுடன் சந்திப்பு.

videodeepam