deepamnews
இலங்கை

பல்கலைக்கழக மாணவி திடீர் மரணம்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தின் இறுதியாண்டு மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மாணவி அளவுக்கு அதிகமாக போதை மாத்திரைகளை உட்கொண்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்தது.

பல்கலைக்கழக விடுதியில் உள்ள அறைக்குள் சுகவீனமடைந்த நிலையில் அவரது நண்பர்களால் பேராதனை போதனா வைத்தியசாலையில் நேற்று (28)அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி இன்று (01) அதிகாலை உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் குருநாகல் பகுதியைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மேலும் அவர் மன அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வந்ததும் தெரியவந்துள்ளது.

Related posts

போராட்டத்தின் போது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவு

videodeepam

ஜெனிவா தீர்மானத்தை இலங்கை அரசு நிராகரிப்பு

videodeepam

தேர்தல்கள் ஆணைக்குழுவிலிருந்து பி.எஸ்.எம் சால்ஸ் பதவி விலகினார்

videodeepam