deepamnews
இலங்கை

ஜீவன் தொண்டமான் இந்தியாவுக்கு விஜயம் – புது டெல்லியில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்கின்றார்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

நீர் வழங்கல் மற்றும் பெருந்தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் ஊடக செயலாளர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

பூகோள காலநிலை, பொருளாதாரம் தொடர்பில் இந்தியாவின் புது டெல்லியில் இன்று  நடைபெறும் Raisina Dialogue மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் விஜயம் செய்யவுள்ளார்.

இந்த மாநாட்டை தவிர, நாளை நடத்த திட்டமிடப்பட்டுள்ள விசேட கலந்துரையாடல் ஒன்றிலும் அமைச்சர் கலந்துகொள்ளவுள்ளார்.

Related posts

இலங்கையில் 5 வயதிற்கு உட்பட்ட 50 வீதமான குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு

videodeepam

உற்பத்தி திறனற்ற 17 அரச நிறுவனங்களை மூட யோசனை முன்வைப்பு

videodeepam

உரம் இறக்குமதி செய்வதற்கு விவசாய அமைச்சு தீர்மானம்

videodeepam