deepamnews
இலங்கை

ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் இந்த மாதத்திற்குள் நியமனம் – எஸ்.பி திஸாநாயக்க பகிரங்கம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விரைவில் தாம் உட்பட பல அமைச்சரவை அமைச்சர்களை நியமிக்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குறைந்தபட்சம் மேலும் ஒன்பது அமைச்சரவை அமைச்சர்கள் இந்த மாதத்திற்குள் நியமிக்கப்படுவார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.

நல்லதொரு அமைச்சரவையை நியமிப்பது ஜனாதிபதிக்கு அவசியமானது என்றும் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

காமினி லொகுகே, ஜனக பண்டார தென்னகோன், ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, எஸ்.எம்.சந்திரசேன, சி.பி.ரத்நாயக்க, ரோஹித அபேகுணவர்தன மற்றும் சரத் வீரசேகர ஆகியோரின் பெயர்கள் ஜனாதிபதியிடம் முன்மொழியப்பட்டுள்ளன.

முன்னதாக அந்தப் பட்டியலில் பவித்ரா வன்னியாராச்சியின் பெயரும் இருந்ததன் காரணமாகவே அவர் அண்மையில் அமைச்சரவை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

இதேவேளை முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவின் பெயரும் முன்மொழியப்பட்டதா என வினவியபோது, அந்த பட்டியலில் அவரது பெயர் இல்லை என்று எஸ்.பி திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts

யாழில் மீற்றர் வட்டிக் கொடுமையால் உயிரை மாய்த்த வர்த்தகர்

videodeepam

இலங்கை கடற்பரப்பில் விபத்திற்குள்ளான படகிலிருந்த 104 மியன்மார் பிரஜைகள் மீட்பு

videodeepam

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பம்

videodeepam