deepamnews
சர்வதேசம்

திட்டமிட்டவாறு மே 14 ஆம் திகதி தேர்தல் நடைபெறும் என துருக்கி அதிபர் அறிவிப்பு

துருக்கியில் ஜனாதிபதி தேர்தலும் பாராளுமன்ற தேர்தலும் திட்டமிட்டவாறு எதிர்வரும் மே 14 ஆம் திகதி நடைபெறும் என அந்நாட்டின் அதிபர்  Recep Tayyip Erdogan அறிவித்துள்ளார்.

துருக்கியில் அண்மையில் ஏற்பட்ட நிலநடுக்கங்களால் சுமார் 50,000 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு தேர்தலுக்கான ஆயத்தங்களை செய்வதில் தேர்தல்கள் ஆணைக்குழு சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும் என அஞ்சப்படும் நிலையில், Recep Tayyip Erdogan இந்த அறிவிப்பை வௌியிட்டுள்ளார்.

‘கடவுளின் விருப்பம் இருந்தால், இந்த நாடு மே 14 ஆம் திகதி தேவையானதை செய்யும்,’ என பாராளுமன்றத்தில் அவர் தெரிவித்ததாக துருக்கி ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

நிலநடுக்கத்திற்கு முன்னதாக அவரின் தனிப்பட்ட புகழ் குறைந்தமை மற்றும் பேரிடர் நிலையின் போது அரசாங்கம் அதனை கையாண்ட விதம் தொடர்பில் விமர்சனங்கள் எழுந்துள்ளமையையும் பொருட்படுத்தாது அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.  

Related posts

வடகொரியாவில் 11 நாட்களுக்கு பொது மக்கள் சிரிப்பதற்கு தடை – ஜனாதிபதி கிம் ஜாங் உன் உத்தரவு

videodeepam

துருக்கி- சிரியா நிலநடுக்கம்: உயிரிழப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை கடந்தது!

videodeepam

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தார் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்

videodeepam