deepamnews
இலங்கை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை திர்மானிக்க இன்று கூடுகிறது தேர்தல்கள் ஆணைக்குழு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதியை தீர்மானிப்பது உள்ளிட்ட தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று கூடவுள்ளது.

இதனிடையே, உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் எழுந்துள்ள சிக்கல்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் மற்றும் ஆணைக்குழுவிற்கு இடையில் பெப்ரவரி விசேட கலந்துரையாடல் இடம்பெற்றதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர், சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

Zoom தொழில் நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற இந்த கலந்துரையாடலில், உரிய வகையில் நிதி கிடைக்காமையினால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான அடுத்தக்கட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் ஏற்பட்டுள்ள தடைகள் தொடர்பில் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகள் ஆணைக்குழுவிடம் எடுத்துரைத்துள்ளனர்.

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் காலம் தாழ்த்தப்படுகின்றமையால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் மாவட்ட தெரிவித்தாட்சி அதிகாரிகளால் இதன்போது ஆணைக்குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

Related posts

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஜப்பான் தொடர்ந்து ஆதரவு

videodeepam

கடற்கரைகளில் ஆபத்து – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

videodeepam

கோதுமை மா இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

videodeepam