deepamnews
இலங்கை

இலங்கை இந்திய மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல் – கச்சத்தீவில் நேற்று பேச்சுவார்த்தை  

இலங்கை இந்திய மீனவர்களிடையே நீண்டகாலமாக இடம்பெற்று வரும் இழுவை மடி படகுகளின் பிரச்சினை தொடர்பாக கச்சத்தீவில் நேற்றைய தினம் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது.

கச்சத்தீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா, நேற்றும் ஆரம்பமானதுடன், இன்று இடம்பெறுகின்ற நிலையில் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இரு நாட்டு மீனவ பிரதிநிதிகளின் பங்குபற்றுதலுடன் இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை மடி பணியினை விடுத்து பிறதொழில்களுக்கு தங்களை அனுமதிக்க வேண்டும் எனவும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ள தங்களது படகுகள் விடுவிக்கப்பட வேண்டும் எனவும் இந்திய மீனவ பிரதிநிதிகள் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், வாழ்வாதாரத்துக்காக வரும் மீனவர்களை மனித உரிமை அடிப்படையில் கைது செய்யாது விடுவிக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரியிருந்தனர்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த இலங்கை மீனவர்கள் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்ற போதிலும் எந்தவித பிரியோசனமும் இல்லை எனவும் தங்களது நிலையை புரிந்துக் கொள்ளுமாறும் கோரியுள்ளனர்.

இலங்கை மீனவர்களாக இந்திய மீனவர்களை எந்தக் காரணத்துக்காகவும் இலங்கை கடற்பரப்பிற்குள் அனுமதிக்க முடியாது எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து, கருத்து தெரிவித்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நேற்று கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பாக அடுத்த அமைச்சரவையில் வெளிப்படுத்துவதாக தெரிவித்துள்ளார்.

Related posts

மருமகன் தாக்கி மாமியார் பலி, மனைவியின் நிலை கவலைக்கிடம் – வவுனியா பெரிய உலுக்குளம் பகுதியில் சம்பவம்

videodeepam

வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தின் பூசாரி உட்பட இருவர் கைது

videodeepam

இலங்கையில் போலி நாணயத்தாள்களின் புழக்கம் அதிகப்பு – பொதுமக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை

videodeepam