deepamnews
இலங்கை

நாணய நிதியத்தின்  முகாமைத்துவ பணிப்பாளருடன் ஜனாதிபதி ரணில் முக்கிய கலந்துரையாடல்

சர்வதேச நாணய நிதியத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜியேவா மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு இடையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

தொலைக்காணொளி ஊடாக இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இலங்கை எதிர்பார்க்கும் சர்வதேச நாணய நிதியத்தின் நிதி வசதி மற்றும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இதன்போது நீண்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு மற்றும் நிதி வசதி தொடர்பான அனைத்து தரப்பினரிடமிருந்தும் தற்போது சாதகமான மற்றும் நம்பிக்கையான பின்னணி உருவாக்கப்பட்டு வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

Related posts

தமிழ் கட்சிகளின் உறுப்பினர்களுடன் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாடல்

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின்  உதவியுடனோ, இல்லாமலோ நாட்டை ஸ்திரப்படுத்த வேண்டும் – மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

videodeepam

மின்வெட்டு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு உயர்நீதிமன்றில் அவமதிப்பு வழக்கு

videodeepam