deepamnews
இலங்கை

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு

யாழ் சர்வதேச வர்த்தக கண்காட்சி வடமாகாண ஆளுநரால் ஆரம்பித்து வைப்பு. யாழில் 13 சர்வதேச வர்த்தகக் கண்காட்சி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா ஆரம்பித்து வைத்தார்.

வடக்கில் நுழைவாயில் என்னும் தொனிப் பொருளில் ஆரம்பிக்கப்பட்டுள்ள குறித்த கண்காட்சி ஆனது மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற உள்ளது.

குறித்த கண்காட்சியில் தென்னிலங்கை உற்பத்தியாளர்களின் காட்சிக் கூடங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதுடன் உள்ளூர் உற்பத்திக் கூடக்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

ஆரம்ப நிகழ்வில் யார் இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெபாஸ்கரன், யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் , யாழ் மாநகர ஆணையாளர் ஜெயசீலன், யாழ்ப்பாண தொழில்துறை மன்ற தலைவர் விக்னேஷ் எனந் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

இளையவர்களுக்கான பயிற்சி பாசறை

videodeepam

அத்தியாவசிய செலவினங்களுக்கு மாத்திரம் நிதி ஒதுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை

videodeepam

பாணின் விலையில் மாற்றமில்லை – பேக்கரி உரிமையாளர் சங்கம்

videodeepam