deepamnews
இலங்கை

மகனின் மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் தாயாரும் உயிரிழந்துள்ளார்.

கடந்த 1ஆம் திகதி வவுனியா நெடுங்கேணி பகுதியில் மாடு முட்டி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நபர் 2 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

இராசரட்ணம் கனகராஜா (வயது 43) என்ற மூன்று பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் நேற்று உயிரிழந்துள்ளார்.

அவரது மரண செய்தியை கிளிநொச்சியில் வசிக்கும் தாயார் நேற்று அறிந்து, அவரும் அதிர்ச்சியில் உயிரிழந்தார்.

இராசரட்ணம் வீரம்மா ( 82 ) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இருவரது மரண சடங்குகளும் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியில் இடம்பெறவுள்ளது.

Related posts

சகல உள்ளூராட்சி மன்றங்களும் உடனடியாக கலைக்கப்பட வேண்டும் – ஐக்கிய மக்கள் சக்தி வலியுறுத்தல்  

videodeepam

கிளிநொச்சியில் கவனயீர்ப்பு போராட்டம்!

videodeepam

பாதுகாப்பாக எடுத்துச் செல்லப்பட்ட எழுதாரகை படகு

videodeepam