அனைலதீவு பாலத்திலிருந்து ஊர்காவற்துறை கண்ணகை அம்மன் பாலம் ஊடாக இன்றைய தினம் கடத்தவிருந்த சட்டவிரோதமான ஒரு தொகை மாட்டிறைச்சியுடன்அதனை கடத்தி வந்த நபரை அனலைதீவில் பாதுகாப்பு கடமையிலிருந்த பொலிசார் கைது செய்துள்ளனர்.
இக் குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர் யாழ் – மாதகல் பகுதியைச் சேர்ந்தவர் என அறியமுடிகிறது.
சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர். விசாரணைகளின் பின்னர் அவர் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளார்.