deepamnews
சர்வதேசம்

உக்ரைனில் குடியிருப்பு மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்- 11 பேர் பலி

உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா ரஷ்ய நடத்திய ஏவுகணை தாக்குதலில்   உயிரிழந்தேவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.

உக்ரைன் – ரஷ்யா போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உக்ரைன் நகரம் மீது அவ்வப்போது ரஷ்யா குண்டு தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், உக்ரைனின் ஜபோரிஜ்ஜியா நகரில் மக்கள் வசிக்க கூடிய, 5 அடுக்குமாடிகள் கொண்ட குடியிருப்பு கட்டடம் மீது ரஷ்ய ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது. இதில்கட்டிடம் முற்றிலும் சேதமடைந்தது. இந்த தாக்குதலில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 11 ஆக உள்ளது.

குடியிருப்பு கட்டடம் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு  கண்டனம் தெரிவித்து உள்ள உக்ரைன்  ஜெலன்ஸ்கி, தமது மக்களுக்கு ஒவ்வொரு நாளையும் பயங்கர நாளாக மாற்றுவதற்கு ரஷ்யா  விரும்புகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், தமது நிலத்தில் தீங்கு செய்பவர்கள் ஆட்சி செய்ய முடியாது எனவும் ஆக்கிரமிப்பாளர்கள் அனைவரும் விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Related posts

அமெரிக்க  வெள்ளை மாளிகை அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

videodeepam

பிரான்ஸில் பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்  – மன்னர் சார்லஸின் பயணத்தில் இரத்து  

videodeepam

பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் எந்தவொரு வர்த்தக உறவையும் தொடராது – பிரதமர் ரிஷி சுனக் அறிவிப்பு

videodeepam