வரலாற்று சிறப்புமிக்க வண்ணார்பண்ணை கன்னாத்திட்டி ஸ்ரீ காளியம்பாளின் இரதோற்சவம் உற்சவம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.
கருவறையில் வீற்றிருக்கும் ஸ்ரீ காளியம்பாளுக்கும் விநாயகர், முருகன் ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேசக ஆராதனைகள் என்பன இடம்பெற்று காளியம்பாள் தனியாக வசந்தமண்டவத்தில் இருந்து எழுந்தருளிய உள்வீதியுடாக வலம்வந்து வெளிவீதியுடாக தேரோரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதில் ஆண்கள், பெண்கள் என அனைவரும் அம்பாளின் திருத்தேரின் திருவடத்தினை பிடித்து தேரினை இழுத்துச்சென்றனர்.
இதன்போது அடியவர்கள் கற்பூரச்சட்டி எடுத்தும், பால்குடம் எடுத்து தமது நேர்த்திக்கடனை நிறைவேற்றிக்கொண்டனர்.
கடந்த 26.02.2023அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹா உற்சவம் நாளை தீர்த்ததோற்சவத்துடனும், மாலை கொடியிறக்கத்துடன் இனிதே மஹோற்சவத்துடன் இனிதே நிறைவடையும்.
இந்த உற்சவத்தில் பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.










