deepamnews
இலங்கை

இலங்கையை வந்தடைந்த உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம்

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான Airbus A380-800 நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

விமானத்திற்குத் தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காக குறித்த விமானம் இலங்கையை வந்தடைந்துள்ளது.

நியூசிலாந்தின் ஒக்லண்ட் நகரிலிருந்து துபாய் நோக்கி பயணிக்கும் குறித்த EK 449 விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து 62,800 லீட்டர் எரிபொருளை பெற்றுக் கொண்டுள்ளது.

இதன் பெறுமதி சுமார் ஒரு கோடியே 68 இலட்சம் ரூபாவாகும்.

ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்களுக்கு பின்னர் விமானம் மீண்டும் துபாய் நோக்கி புறப்பட்டுச் சென்றதாக நியூஸ்பெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

Related posts

77 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார் மஹிந்த ராஜபக்ஸ – முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவும் பங்கேற்பு

videodeepam

பலாலி- சென்னை விமான போக்குவரத்து இம்மாத இறுதியிலேயே ஆரம்பம்

videodeepam

அரசாங்கம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் – நாலக கொடஹேவா உறுதி

videodeepam