deepamnews
இலங்கை

கோண்டாவிலில் 5 லீட்டர் கசிப்புடன் ஒருவர் கைது!

கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கோண்டாவில் பகுதியில் சட்டவிரோதமாக கசிப்பினை வைத்திருந்த சந்தேகநபர் ஒருவர் நேற்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு 5 லீட்டர் கசிப்புடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கோப்பாய் பொலிஸாரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

நாட்டை வழிநடத்த பசில் தகுதியானவர் – சாகர காரியவசம் தெரிவிப்பு

videodeepam

இலங்கையில் கடந்த வாரம் 18,900 கோடி ரூபா பணம் அச்சடிப்பு – IMF இன் உத்தரவு மீறல்

videodeepam

வீதிகளை புனரமைக்கக் கோரி மூளாயில் மக்கள் போராட்டம்!

videodeepam