deepamnews
இலங்கை

மார்ச் 9 முதல் தொடர் போராட்டம் – தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானம்

அரசாங்கத்தின் வரிக்கொள்கைக்கு எதிராக மார்ச் 9 ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க ஒன்றியம் தீர்மானித்துள்ளது.

கொழும்பில் நேற்று (07) நடைபெற்ற ஒன்றிணைந்த சந்திப்பின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், அரச வைத்திய அரிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 40 தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் இந்த  சந்திப்பில் கலந்துகொண்டிருந்தனர்.

அத்துடன்,அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுக்கு ஏற்ப கொடுப்பனவுகளை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து சுகாதாரத் துறையைச் சேர்ந்த பல தொழிற்சங்கங்கள் இன்று ஒரு நாள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட திட்டமிட்டுள்ளன.

இன்று காலை 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இந்த பணிப்புறக்கணிப்பு காரணமாக, வெளிநோயாளர் சிகிச்சைப் பிரிவு, மருத்துவ ஆய்வகப் பிரிவு உள்ளிட்ட ஏனைய சேவைகள் பாதிக்கப்படலாம் என அரச மருந்தாளர் சங்கத்தின் தலைவர் அஜித் பி. திலகரத்ன குறிப்பிட்டுள்ளார்.

Related posts

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பலர் வெகுவிரைவில் அரசாங்கத்துடன் இணைவு

videodeepam

பனம் தோட்டங்களை பாதுகாக்கும் நோக்கில் நிபுணத்துவம் வாய்ந்த அறிஞர்களின் குழு நியமனம்!

videodeepam

கார்பன் வெளியேற்றம் தொடர்பில் இலங்கையுடன் சிங்கப்பூர் ஒப்பந்தம்.

videodeepam