deepamnews
இலங்கை

இளவாலை யில் வாள்வெட்டினை மேற்கொண்ட கும்பல் கைது

இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிப்புலம்  ஐயப்பன் கோவில் பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 26ஆம் திகதி ஒருவர் மீது வாளால் வெட்டி காயப்படுத்தி அவரது காரையும் சேதப்படுத்தி  தப்பிச் சென்ற நால்வர் அடங்கிய குழு கைதசெய்யப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பிரிவின் பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரால் இன்று  கைது செய்தனர்.

சந்தேகநபரிடம் மேற்கொண்ட விசாரணையில்   கனடா நாட்டிலிருந்து இரண்டு லட்சம் ரூபா பணம் அனுப்பப்பட்டு  இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.

பனிப்புலம் மற்றும் சங்கானை பகுதியைச் சேர்ந்தவர்கள் இந்தத் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர் எனவும் கைதுசெய்யப்பட்ட சந்தேகநபரிடமிருந்து  வாள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

வடக்கு, கிழக்கில் இறந்த கால்நடைகளுக்கு நட்டஈடு -விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர நடவடிக்கை

videodeepam

ஜனநாயக உரிமைகள் தொடர்ந்தும் மறுக்கப்படுமா? – சாணக்கியன்

videodeepam

தமிழ் மக்களின் நன்மை கருதி மாவை சேனாதிராஜாவின் தலைமைத்துவத்தை ஏற்பதாக சி.வி. விக்னேஷ்வரன் தெரிவிப்பு

videodeepam