deepamnews
இலங்கை

ஊழியர் பற்றாக்குறை காரணமாக போக்குவரத்து சேவை பாதிப்பு – ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

ஊழியர் பற்றாக்குறை காரணமாக தற்போது  ரயில் மற்றும் இலங்கை போக்குவரத்து சபை சேவையில் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து துறைசார் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் நாளாந்த ரயில் சேவைகள் சில இரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்தது.

சாரதிகள் மற்றும் நடத்துநர்களின் பற்றாக்குறையால் இலங்கை போக்குவரத்து சபையினூடாக அதிகபட்ச சேவையை வழங்குவதிலும் இடையூறு ஏற்பட்டுள்ளது.

இதனால் தமது நாளாந்த பொதுப்போக்குவரத்தை பயன்படுத்த முடியாத பயணிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

Related posts

புகையிரத சேவை நேர அட்டவணை மறுசீரமைப்பு

videodeepam

வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

videodeepam

எதிர்க்கட்சியினர் ஒத்துழைக்கவில்லை- ஹரீன் பெர்னாண்டோ கவலை தெரிவிப்பு

videodeepam