deepamnews
இலங்கை

மாணவர்களின் போராட்டத்தின்போது காலாவதியான கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு

மாணவர்களின் போராட்டத்தின்போது காலாவதியான கண்ணீர்ப்புகை பிரயோகிக்கப்பட்டிருப்பின் அது தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட சம்பிக ரணவக்க, ஜனநாயக போராட்டங்களை வன்முறைகள் ஊடாக முடக்குவதற்கு அரசாங்கம் முயற்சிக்கக் கூடாது என்று தெரிவித்தார்.

பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதி இன்றி பல்கலைக்கழகத்திற்குள் நுழைத்த பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இராணுவத்தினரைக் கொண்டு முடக்குமளவிற்கு அங்கு எவ்வித வன்முறைகளும் இடம்பெறவில்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

கடந்த பல வருடங்களுக்கு முன்னர் இவ்வாறான வன்முறைகளால் நூற்றுக்கணக்கான உயிரிழப்புக்கள் ஏற்பட்டதைப் போன்ற நிலைமை மீண்டும் ஏற்பட்டு விட இடமளித்து விட வேண்டாம் என்று அரசாங்கத்தைக் கேட்டுக் கொள்வதாகவும்,  1971ஆம் ஆண்டு ஏற்பட்ட நூற்றுக்கணக்கான உயிர்களை காவு கொண்ட கலவரம் போன்ற சூழலை ஏற்படுத்தி விடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்,

அத்துடன், மாணவர்கள் வன்முறையை நோக்கிச் செல்வதை தடுக்கும் பொறுப்பு பெற்றோருக்கும், பேராசிரியர்கள், விரிவுரையாளர்களுக்கும் உண்டு என்று சம்பிக ரணவக்க தெரிவித்துள்ளார்.

Related posts

உள்ளூராட்சி நிறுவனங்களின் பதவிக்காலம் நிறைவு – ஆணையாளரின் வசமாகும் அதிகாரம்

videodeepam

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam

அரச அச்சகம் திறைசேரிக்கு மீண்டும் கடிதம் –  நிதியை விரைவாக வழங்குமாறு கோரிக்கை

videodeepam