deepamnews
இலங்கை

விபரீத முடிவெடுத்த ஆண் ஒருவர் உயிர்மாய்ப்பு – மல்லாகத்தில் சம்பவம்

தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்லாகம் 8ஆம் கட்டை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இன்றையதினம் குறித்த வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 30 வயதுடைய ஆண் ஒருவருடைய சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

வீட்டில் உள்ளவர்கள் வெளியே சென்று விட்டு வீட்டிற்கு வந்து பார்த்தவேளை குறித்த நபர் தூக்கில் சடலமாக இருந்ததை அவதானித்தனர்.

அதனைத் தொடர்ந்து தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது. அவ்விடத்திற்கு விரைந்த பொலிஸார் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

Related posts

யாழ்ப்பாணம் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் சிரமதானம்

videodeepam

தாலி செய்து தருவதாக கூறி பணத்தை பெற்றுவிட்டு தண்ணி காட்டியவர் கைது!

videodeepam

நாவலப்பிட்டி மாகும்புர பகுதியில் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

videodeepam