இலங்கை நீண்டகால பொருளாதார நிலைத்தன்மையை அடைய வேண்டுமாயின் நிறுவன சீர்திருத்தங்களை மேற்கொள்வது இன்றியமையாதது என அமெரிக்காவின் ஜோன் ஹொப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதார நிபுணர் பேராசிரியர் ஸ்டீவ் ஹாங்க் தெரிவித்துள்ளார்.
அர்ஜென்டினா மற்றும் மாண்டினீக்ரோ போன்ற நாடுகளில் புதிய நிதி வெற்றிகளை அடைவதற்கான செயல்முறைகளில் பெரும் பங்கு வகித்த பேராசிரியர் ஹாங்க், சிஎன்பிசிக்கு அளித்த பேட்டியில், இலங்கை நிறுவன கட்டமைப்புகள் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்களை மேற்கொள்வது இன்றியமையாதது என குறிப்பிட்டுள்ளார்.