உள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கம் எவ்வளவோ சதிகளை முன்னெடுத்தாலும் சரிமக்கள் சக்தி அனைவரையும் விட பலமானது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கெசல்வத்தையில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போதைய ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் ராஜபக்ச குடும்பத்தை பாதுகாத்து வருவதாக சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.