deepamnews
சர்வதேசம்

அமெரிக்க  வெள்ளை மாளிகை அருகே திடீர் தீ விபத்தால் பரபரப்பு

அமெரிக்கா தலைநகர் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகைக்கு அருகில் உள்ள ஐசன்ஹோவர் நிர்வாக அலுவலகத்தில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.

இதையடுத்து உடனே எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டு அங்கிருந்த ஊழியர்கள் அனைவரும் உடனடியாக அலுவலகத்தை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

தீயணைப்பு படையினர் அங்கு விரைந்து சென்று போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

ஏர்கண்டிஷனரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த தீ விபத்தால் வெள்ளை மாளிகை அருகே பரபரப்பு ஏற்பட்டதாக அங்குள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

ஈரானில் அரசாங்க தொலைக்காட்சியை முடக்கிய போராட்டக்காரர்கள்

videodeepam

தாய்வானை இணைப்பதற்கு ராணுவத்தை பயன்படுத்தவும் தயங்கமாட்டோம்-  சீன ஜனாதிபதி

videodeepam

கனடாவில் கடும் தொழிலாளர் பற்றாக்குறை -ஐந்து இலட்சம் பேரை உள்வாங்க திட்டம்

videodeepam