deepamnews
இலங்கை

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என அறிவிப்பு

இன்று நடைபெறவுள்ளதாக கூறப்படும் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் பல புகையிரத தொழிற்சங்கங்கள் இணைந்து கொள்ளாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, புகையிரத நிலைய அதிபர்கள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம், புகையிரத கட்டுப்பாட்டாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல புகையிரத தொழிற்சங்கங்கள் உரிய தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடாது.

இதேவேளை, 1979 ஆம் ஆண்டின் 61 ஆம் இலக்க அத்தியாவசிய பொதுச் சேவைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் பிரகாரம் அத்தியாவசிய பொது சேவையாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இலங்கை புகையிரத சேவையின் அனைத்து ஊழியர்களினதும் விடுமுறையை இரத்து செய்வதற்கு ரயில்வே பொது முகாமையாளர் நடவடிக்கை எடுத்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Related posts

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தெல்லிப்பழையில் பேரணி!

videodeepam

காணிக்கான அனுமதிப் பத்திரங்கள் வழங்கி வைப்பு

videodeepam

பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்து திரட்டும் நடவடிக்கை பொலநறுவையில்!

videodeepam