deepamnews
சர்வதேசம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கைது செய்வதற்குத் தடை

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை இன்று காலை 10 மணி வரை கைது செய்ய தடை விதித்து லாகூர் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தெஹ்ரீக்-இ-இன்சாப் தலைவர் ஃபவாத் சவுத்ரி தாக்கல் செய்த மனு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இம்ரான் கானின் வீட்டிற்கு வெளியே இடம்பெறும் மிலேச்சத்தனமான செயற்பாடுகளை நிறுத்த வேண்டுமெனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இதனிடையே,  நேற்று பிற்பகல் வேளையில் இம்ரான் கானின் இல்லத்தின் முன் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படையினர் திரும்பி அனுப்பப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இம்ரான் கான் பாகிஸ்தானின் பிரதமராக கடமையாற்றிய போது, சர்வதேச நாடுகளிலிருந்து அரசாங்கத்தின் சார்பில் கிடைக்கப்பெற்ற சிறப்பு பரிசுப் பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்ததாகக் குற்றஞ்சாட்டப்பட்டது.

இது தொடர்பான வழக்கில் மன்றில் ஆஜராகாததால், இம்ரான் கானை கைது செய்யுமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பொஸ்பரஸ் வெடிமருந்துகளை கொண்டு ரஷ்யா தாக்குதல் – உக்ரைன் குற்றச்சாட்டு

videodeepam

இஸ்ரேலுக்கும் – பாலஸ்தீனத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் அறிவிப்பு!

videodeepam

துருக்கியில் நேற்று  நிலநடுக்கம் – உயிர்சேதங்கள் ஏதும் இல்லை என அறிவிப்பு

videodeepam