deepamnews
இலங்கை

கிணற்றில் யுவதியின் சடலம்.

மிஹிந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிப்புக்குளம் பகுதியில் விவசாய கிணற்றில் தவறி விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உயிரிழந்த யுவதியின் சகோதரி, மாடுகளைப் பார்ப்பதற்காக அருகிலுள்ள வயல் பகுதிக்குச் சென்று மீண்டும் வீடு திரும்பிய போது தனது மூத்த சகோதரி வீட்டில் இல்லாததால் அவரை தேடியுள்ளார்.

இதன்போது, குறித்த யுவதி அங்கிருந்த விவசாய கிணற்றில் விழுந்து கிடப்பதை கண்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மிஹிந்தலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பான அறிவிப்பு வெளியானது!

videodeepam

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை உத்தியோகப்பூர்வ விஜயமாக சவூதி அரேபியா செல்கிறார்

videodeepam

2023 ஆம் ஆண்டில் அரசின் மொத்த செலவினம் 7 ஆயிரத்து 885 மில்லியன் ரூபாய் என கணிப்பு

videodeepam