deepamnews
இலங்கை

யாழ் – கொழும்பு விமான சேவை விரைவில் ஆரம்பம்

யாழ் சர்வதேச விமான நிலையம் ஊடாக யாழ் – கொழும்பு விமான சேவையை ஆரம்பிப்பதற்கு ஆராய்ந்துகொண்டிருப்பதாக  என யாழ்ப்பாணத்திற்கான இந்தியத் துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.

அதாவது, யாழ் இந்தியத் துணைத்தூதரகம் மற்றும் வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சும் இணைந்து ஏற்பாடு செய்த சர்வேத மகளிர் தின நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக மேற்கொள்ளப்படும் யாழ் – சென்னை விமான சேவையூடாக பலர் நன்மையடைந்து வருகின்றனர். இந்த சேவையை எப்படி நீடிப்பது என்று ஆராய்ந்து வருவதுடன் மேலும் யாழ்ப்பாணம் சர்வதேச விமானம் நிலையம் ஊடாக தென்னிந்தியாவின் ஏனைய நகரங்களுக்கும் சேவையை விஸ்தரிப்பதற்கு தீர்மானித்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்

Related posts

பாராளுமன்றம் ஒத்திவைப்பு – பெப்ரவரி 8 ஆம் திகதி புதிய கூட்டத்தொடர் ஆரம்பம்

videodeepam

வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை – இலங்கையில் அதிகரிக்கும் மழை

videodeepam

இலங்கை கோரும் கடன் உத்தரவாதத்திற்கு பாரிஸ் கழகத்திடமிருந்து சாதகமான பதில்.

videodeepam