deepamnews
இலங்கை

ஒரு நாள் வேலை நிறுத்தம் காரணமாக நாட்டுக்கு 46 பில்லியன் ரூபா நட்டம்.

ஒரு நாள் வேலைநிறுத்தம் காரணமாக நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் நாளாந்த வருமானமாக 46 பில்லியன் ரூபாவை இழக்கும் என நிதி இராஜாங்க அமைச்சர் திரு.ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

வேலைநிறுத்தங்களால் கல்விக்கு ஏற்பட்டுள்ள சேதங்கள் கணக்கிட முடியாத அளவுக்கு அதிகம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாள் நாடு முற்றாக முடக்கப்பட்டால் நாட்டுக்கு 46 பில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படும் எனவும் அதற்காக சிலர் உழைத்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நாட்டின் வருடாந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி 16,809 பில்லியன் ரூபா எனவும் அதனை 365 நாட்களால் வகுக்கும் போது நாளாந்த வருமானம் 46 பில்லியன் ரூபா எனவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்

Related posts

தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் மரணத்துக்கு ஜனாதிபதியே பொறுப்பேற்க வேண்டும் என்கிறார் சுமந்திரன்

videodeepam

ஒற்றையாட்சி அரசில் அதிகபட்ச அதிகாரப் பகிர்வுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் – சுதந்திரதின உரையில் ஜனாதிபதி உறுதி

videodeepam

தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்கிறார் மஹிந்த ராஜபக்ஷ – தேர்தலுக்குத் தாம் தயார் எனவும் தெரிவிப்பு

videodeepam