deepamnews
இலங்கை

ஏப்ரல் 25 ஆம் திகதி தேர்தல் நடத்த வாய்ப்பில்லை – பெப்ரல் அமைப்பு அறிவிப்பு

இலங்கையின் தேர்தல் ஆணைக்குழுவினால் அறிவிக்கப்பட்டபடி உள்ளூராட்சி தேர்தல் ஏப்ரல் 25 ஆம் திகதியன்று நடத்தப்படும் என்பதற்கு சாத்தியப்பாடுகள் குறைவு என்று பெப்ரல் எதிர்வு கூறியுள்ளது.

அரசாங்கம் இந்த விடயத்தில் நீதிமன்ற முடிவுகளை கூட புறக்கணிப்பது வருந்தத்தக்கது என்று அமைப்பின் நிர்வாக இயக்குநர் ரோஹன ஹெட்டியாரச்சி குற்றம் சுமத்தியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உரிமையை பறிக்கும் என்று ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை.

எனினும், நீதிமன்ற முடிவுகளைக் கூட புறக்கணிக்கும் நிலைமைக்கு அரசாங்கம் வந்துள்ளது.

இதன் காரணமாக நாடாளுமன்றம், நிர்வாகம் மற்றும் நீதித்துறை ஆகிய மூன்று தூண்களிடையே சமநிலை இப்போது முழுமையான குழப்பத்தில் உள்ளது என்று ரோஹன ஹெட்டியாரச்சி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

தமிழ் மக்கள் தங்கள் அடையாளம் சுயமரியாதையை காப்பாற்ற முடியாத நிலையேற்படும் – இரா.சம்பந்தன் கவலை

videodeepam

உள்ளூராட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று முதல் ஆரம்பம்

videodeepam

இலங்கைக்கு விஜயம் செய்கின்றார் எஸ்.ஜெய்சங்கர்?

videodeepam