deepamnews
இலங்கை

அராலி பல்பொருள் விற்பனையகத்திற்கு தீ வைப்பு!

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட  அராலி மேற்கு பகுதியில் உள்ள பல்பொருள் விற்பனை கடை ஒன்றுக்கு தீ வைத்த நிலையில் கடையானது பகுதியளவில் எரிந்து சேதமாகியுள்ளது. இச்சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக அறிய முடிகிறது.

கடையின் உரிமையாளர் இன்று காலை வழமை போல விற்பனை நடவடிக்கைக்காக கடையை திறக்க முற்பட்டவேளை கடையானது பகுதி எரிந்து சேதமாகியிருந்தமை அவதானிக்கப்பட்டது.

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

இனப்பிரச்சினையை தீர்க்க தமிழ் தரப்பும் ஒத்துழைக்க வேண்டும் –  அரசாங்கம் கோரிக்கை

videodeepam

இலங்கையில் 62 இலட்சம் பேருக்கு மனிதாபிமான உதவிகள் தேவை – UNICEF நிறுவனம் அறிக்கை

videodeepam

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

videodeepam