deepamnews
இலங்கை

 மருந்து தட்டுப்பாடு தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணை

அரச வைத்தியசாலைகளில் நிலவும் மருத்து தட்டுப்பாடு தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

சுகாதார அமைச்சின் செயலாளரும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகமும் தேசிய ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையும் இந்த விசாரணைகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, விசாரணைகளுடன் தொடர்புடைய முறைப்பாட்டாளர்களும் பிரதிவாதிகளும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

எனினும், பொறுப்புவாய்ந்த அதிகாரிகள் சமூகமளிக்காமையால், இந்த விசாரணைகளை எதிர்வரும் 23 ஆம் திகதி வரை ஒத்திவைத்துள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கூறியுள்ளது.

விரைவாக தலையீடு செய்து, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகக் கருதி, காலதாமதமின்றி மருந்து தட்டுப்பாட்டை நிவர்த்திக்க வேண்டும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Related posts

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த திருவிழா இன்று ஆரம்பம்

videodeepam

அதிக கட்டணம் வசூலிக்கும் பேருந்துகள் இன்றுமுதல் சோதனை

videodeepam

 ஒல்லித் தேங்காய் குவியலுக்குள் மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட தேக்கம் குற்றிகள் மீட்பு!

videodeepam