deepamnews
இந்தியா

நரேந்திர மோடி குறித்த கருத்துகளை நோபல் குழுவின் துணைத்தலைவர் மறுப்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து தாம் கூறியதாக ட்விட்டரில் வெளியான கருத்துகள் உண்மைக்குப் புறம்பானவை என நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

இந்திய பிரதமர் அமைதிக்கான நோபல் பரிசை வெல்வதற்கு தகுதியானவர் என்றும், அமைதிக்கான நோபல் பரிசுக்கான மிகப்பெரிய போட்டியாளராக அவர் இருப்பதாகவும் நோபல் குழுவின் துணைத்தலைவர் கூறியதாக தகவல் வெளியானது.

தாம் மோடியின் மிக பெரிய ரசிகர் என்றும், பிரதமர் மோடியின் கொள்கைகளால் இந்தியா பணக்கார மற்றும் சக்திவாய்ந்த நாடாக வளர்ந்து வருவதாகவும் ஆஸ்லே டோஜே கூறியதாக தகவல் வெளியிடப்பட்டது.

அத்துடன், பிரதமர் மோடி அமைதிக்கான நோபல் பரிசை வென்றால், அது தகுதியான தலைவருக்கு கொடுக்கப்பட்ட ஒரு வரலாற்று தருணமாக இருக்கும் என்றும் அவர் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்த செய்தியை நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே மறுத்துள்ளார். பிரதமர் மோடி குறித்து தாம் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை என அவர் கூறியுள்ளார்.

ஒரு போலி செய்தி ட்வீட் அனுப்பப்பட்டிருகிறது. அதை நாம் போலி செய்தியாக கருதவேண்டும். அதைப் பற்றி விவாதிக்க வேண்டாம்.

அந்த ட்வீட்டில் இருந்த தகவல்களை தாம் திட்டவட்டமாக மறுப்பதாக நோபல் குழுவின் துணைத்தலைவர் ஆஸ்லே டோஜே தெரிவித்துள்ளார்.

Related posts

இலங்கையுடனான இருதரப்பு இராணுவ பயிற்சிகளை அதிகரிக்க திட்டம் – இந்திய பாதுகாப்பு அமைச்சு அறிவிப்பு

videodeepam

இலங்கை அரசால் இந்த ஆண்டில் மட்டும் 74 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

videodeepam

தமிழக அமைச்சராகிறார் உதயநிதி ஸ்டாலின் – நாளை பதவியேற்பு இடம்பெறவுள்ளது

videodeepam