லிஸ்டீரியா இரத்தினபுரி மாவட்டத்தில் பரவும் அபாயம் இல்லை என சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இரத்தினபுரி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஸ்ரீனி அழகப்பெரும, சிவனொளிபாதமலையை சுற்றியுள்ள கடைகளில் இருந்து எடுக்கப்பட்ட உணவு மாதிரிகள் கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் அண்மையில் உயிரிழந்ததையடுத்து, இது தொடர்பில் சுகாதாரத் திணைக்களத்தின் கவனம் செலுத்தப்பட்டது.
காய்ச்சல், வாந்தி, தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தும் லிஸ்டீரியா, அசுத்தமான உணவின் மூலம் பாக்டீரியாவை உட்கொள்வதால் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அதன்படி, சிவனொளிபாதமலை வீதியில் உள்ள கடைகள் விசேட சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உணவு மாதிரிகள் சேகரிக்கும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்த நோய் தொடர்பில் அச்சப்படவேண்டிய அவசியமில்லை எனவும் டாக்டர் ஸ்ரீனி அழகப்பெரும வலியுறுத்தியுள்ளார்.