deepamnews
இலங்கை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேன விபத்தில் உயிரிழப்பு

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன, அம்பாறை – அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அக்கரைப்பற்றில் இடம்பெற்ற விபத்தின் பின்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது, அவர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ குறிப்பிட்டுள்ளார்.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் P.H.பியசேன பயணித்த மோட்டார் சைக்கிள் தனியார் பஸ் ஒன்றுடன் மோதி நேற்று விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரின் சடலம் கல்முனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸார் விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

ஜெனிவாவில் இலங்கை சந்தித்த மோசமான தோல்வி -உதய கம்மன்பில கவலை

videodeepam

கொழும்பில் காதலி கொலை – தற்கொலைக்கு முயன்ற காதலன்

videodeepam

தேர்தல் பணிகளுக்கு எரிபொருள் நிவாரணம் இல்லை –  இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவிப்பு

videodeepam