deepamnews
இலங்கை

வாகனங்களை இறக்குமதி செய்ய அனுமதி இல்லை – மத்திய வங்கி ஆளுநரிடம் கோரிக்கை

டாலர் நெருக்கடி நாட்டை பாதித்துள்ள நிலையில், மே 24, 2021 அன்று வாகன இறக்குமதியை தற்காலிகமாக நிறுத்த அரசாங்கம் முடிவு செய்தது.

அதன்படி, ஏறத்தாழ 22 மாதங்களுக்கு இலங்கைக்குள் எந்த வாகனமும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் வாகன இறக்குமதியாளர்களின் சங்கம் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டு வாகன இறக்குமதிக்கு மீண்டும் அனுமதி கோரியது.

தற்போதைய நிலைமை தொடர்பில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்ட போதிலும், வாகனங்களை மீள இறக்குமதி செய்வதற்கு மத்திய வங்கி அனுமதி வழங்கவில்லை என இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் எஸ். கே. கமகே தெரிவித்தார்.

மேலும், இந்தக் கலந்துரையாடலில், பயன்படுத்திய வாகன சந்தைக்கு சலுகைகள் கிடைக்கும் வகையில் கடன் வட்டி விகிதங்களைக் குறைப்பதற்கு மத்திய வங்கியின் ஆளுநரும் ஒப்புக்கொண்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள மத்திய வங்கியின் திருத்தச் சட்டமூலத்தின் சில விதிகள் அரசியலமைப்புக்கு எதிராக தீர்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரி தேசிய மக்கள் சக்தி உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்தது.

தேசிய மக்கள் விடுதலை இராணுவத்தின் திரு.வசந்த சமரசிங்கவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில் பிரதிவாதியாக சட்டமா அதிபர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

உத்தேச மத்திய வங்கி திருத்தச் சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில விதிகள் அதன் சுதந்திரத்திற்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம் பாராளுமன்றத்தின் அதிகாரத்தில் இருந்து மத்திய வங்கி விடுபடுவதுடன் மக்களின் இறைமையும் மீறப்படும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு, நாடாளுமன்றத்தின் மூன்றில் இரண்டு பங்கு சிறப்பு பெரும்பான்மை வாக்குகள் மற்றும் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தை மனுதாரர் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இலங்கையைச் சூழவுள்ள பகுதிகளில் வளிமண்டலத் தளம்பல்நிலை – தொடரும் கடும் மழை

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் கடன் மார்ச் மாதத்தில் கிடைக்குமென  ஜனாதிபதி ரணில் நம்பிக்கை

videodeepam

யாழ். பல்கலைக்கழகத்தில் பொங்குதமிழ்!

videodeepam