deepamnews
இலங்கை

நாளை முதல் முட்டை  தட்டுப்பாட்டுக்கு தீர்வு – நாட்டை வந்தடையும் இந்திய முட்டை கப்பல்

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ள முதலாவது முட்டைத் தொகுதியை ஏற்றிச் செல்லும் கப்பல் நாளை (19) நாட்டை வந்தடையும் என அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இரண்டு மில்லியன் முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

தற்போதுள்ள முட்டை தட்டுப்பாட்டைக் குறைக்கவும், விலையைக் கட்டுப்படுத்தவும் முட்டைகளை இறக்குமதி செய்ய அரசு முடிவு செய்திருந்தது.

குறித்த முட்டை இருப்புக்கள் பேக்கரி தொழிற்சாலைகளுக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக அரச வர்த்தக இதர சட்டப்பூர்வ கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

இந்த முட்டைகளை பேக்கரி தொழிற்சாலைகளுக்கு 40 ரூபா அல்லது அதற்கும் குறைவான விலையில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக தயாரிக்குமாறு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related posts

கனேடியத் தமிழர் பேரவையின் கோரிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்தத்தயார் என்கிறார் விஜயதாஸ ராஜபக்ஷ

videodeepam

அரசாங்கத்திற்கு சொந்தமான ஏழு அரச பங்குகளை விற்பனை செய்ய அரசாங்கம் தீர்மானம்

videodeepam

சர்வதேச நாணய நிதியத்தின் உதவிக்காக இலங்கைக்கு ஒத்துழைப்பை வழங்க தயார் என்கிறார்  ஜூலி சங்

videodeepam