deepamnews
இலங்கை

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் படுகாயம்

கொட்டாஞ்சேனை பரமானந்தா மாவத்தையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்

படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்தார்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் முச்சக்கரவண்டி திருத்துபவர் ஒருவரே  காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

அத்துடன், துப்பாக்கிச்சூடு நடந்ததற்கான சரியான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொட்டாஞ்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கொழும்பில் ஆரம்பமானது போராட்டம்

videodeepam

தபால் சேவையை அத்தியாவசிய சேவையாக மாற்றும் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

videodeepam

காற்றாலை மின் திட்டங்களின் திறனை அதிகரிக்க அதானி குழுமம் கோரிக்கை

videodeepam