deepamnews
இலங்கை

ஏப்ரல் 25 தேர்தலை நடத்துவதில் சந்தேகம் – சாத்தியப்பாடுகள் குறைவு என்கிறார் மஹிந்த தேசப்பிரிய

தேர்தல்கள் ஆணைக்குழுவின் வெளியீடுகள் மற்றும் அரச அச்சகமா அதிபரின் கருத்துகளின் படி எதிர்வரும் ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்துவதற்கான சாத்தியப்பாடுகள் குறைவானதாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உள்ளூராட்சி மன்றங்கள் கலைக்கப்பட்டதன் பின்னர் என்ன நடக்கும் என அனைவரிடமும் எதிர்பார்ப்பொன்று உள்ளது.

உள்ளூராட்சி மன்ற நிர்வாகிகள் தொடர்ந்தும் பதவியில் இருப்பது உகந்த விடயம் அல்லவென அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக அமைச்சரின் செயற்பாட்டுக்கு அமையவே மேலும் ஒருவருடம் நீடிக்கப்பட்டது.

இந்தநிலையில், மக்கள் அவர்களுக்கு 4 வருடங்களுக்கு மாத்திரமே அதிகாரத்தை வழங்கியுள்ளனர்.

எவ்வாறாயினும் அவர்கள் 5 வருடங்கள் பதவியில் நீடிக்கின்றனர்.

இது அரசியலமைப்புக்கு முரணானது, எனவே உள்ளூராட்சி மன்ற தேரத்ல் நடத்தப்படவேண்டும்.

இந்தநிலையில், தற்போது குறித்த தேர்தலை நடத்தாதிருப்பதை காட்டிலும் தற்போதைய உள்ளூராட்சி மன்ற நிர்வாகிகளின் பதவி காலத்தை நீடிப்பது பாரிய தவறாகும் என மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

Related posts

ஆற்று மணலுக்கு பதிலாக கடல் மணல் விநியோகம் – நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவிப்பு

videodeepam

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் – மனித உரிமை ஆணைக்குழு அசமந்தம்.

videodeepam

வாகன கொள்வனவு தொடர்பில் பொலிஸாரின் எச்சரிக்கை

videodeepam