deepamnews
இலங்கை

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக குற்றவியல் வழக்குகளை தாக்கல் செய்யுமாறு இலங்கை மத்திய வங்கி சட்டமா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதன்படி, Fast3Cycle International Pvt Ltd, Sport Chain App Sport Chain ZS Society Srilanka மற்றும் Onmax DT ஆகிய தடைசெய்யப்பட்ட 3 பிரமிட் திட்டங்களுக்கு எதிராக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் மத்திய வங்கி விசேட விசாரணைகளை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, வங்கிச் சட்டத்தின் 83C பிரிவுக்கு முரணாக மேற்கண்ட 3 நிறுவனங்களும் அவற்றின் இயக்குநர்கள், விளம்பரதாரர்கள் மற்றும் நிறுவனர்களும் செயல்பட்டதாக முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இது தொடர்பான தீர்மானத்தை இலங்கை மத்திய வங்கி விசேட வர்த்தமானி விளம்பரம் மூலம் அறிவித்திருந்தது.

Related posts

மேலும் பல பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள்  தளர்த்தப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

videodeepam

தென் மாகாணத்தில் குற்றங்களை தடுக்க ஆயுதம் தரித்த 69 குழுக்கள் – அஜித் ரோஹன தகவல்

videodeepam

அனுமதிப்பத்திரம் இல்லாமல் மரக்குற்றிகளை கொண்டு சென்றவர் கைது

videodeepam