deepamnews
இந்தியா

அம்ரிட்பால் சிங்கை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்கிறது

பஞ்சாபில், காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரிட்பால் சிங்கை தேடும் பணிகள் மூன்றாவது நாளாக தொடர்வதாக உயர்மட்ட அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தேடும் பணியில் நூற்றுக்கணக்கான விசேட படையணியினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவரை, அவரது ஆதரவாளர்களால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர் தலைமறைவாகியுள்ளார்.

இந்தநிலையில் மத்திய அரசாங்கம் இவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஆரம்ப பணிகளை ஆரம்பித்துள்ளனர்.

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அம்ரிட்பால் சிங்கிற்கு எதிரான விசாரணைகள் இந்திய தேசிய புலனாய்வு பிரிவினால் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவரை, அவரின் நெருங்கிய நால்வர் உட்பட 112 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related posts

200 கிலோ ஹெரோயினுடன் ஈரான் படகு கொச்சியில் சிக்கியது

videodeepam

பிரதமர் மோடி தான் பொஸ்! – அவுஸ்திரேலிய பிரதமர் புகழாரம்

videodeepam

ஈவிகேஎஸ் இளங்கோவனை எதிர்த்துப் போட்டியிடுபவர் டெபாசிட் இழப்பார் – வைகோ பெருமிதம்

videodeepam