deepamnews
இலங்கை

வெசாக் பண்டிகையை தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட தீர்மானம்

மே 05, 06 மற்றும் 07 ஆம் திகதிகளில் “புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” கங்காராம கோவில், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் பிரதமர் அலுவலக வளாகத்தில் இந்த ஆண்டு வெசாக் பண்டிகையை தேசிய மற்றும் உள்ளூர் மட்டத்தில் மிகக் கோலாகலமாகக் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.

“புத்த ரஷ்மி தேசிய வெசாக் விழா” தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற பூர்வாங்க கலந்துரையாடலில் ஜனாதிபதியின் செயலாளர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஹுனுபிட்டிய, கங்காராம விகாரையின் நிர்வாக அதிகாரி கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர் மற்றும் கலாநிதி பல்லேகம ரதனசார சுவாமினு ஆகியோர் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டதோடு,

ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் தலைமை அதிகாரியுமான திரு.சாகல ரத்நாயக்க அவர்களும் கலந்துகொண்டனர்.

இது தேசிய வெசாக் வலயமாக பெயரிடும் பல நிகழ்ச்சிகளுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக வணக்கத்திற்குரிய கிரிந்தே அசாஜி தெரிவித்தார்

Related posts

எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முக்கிய அறிவிப்பு

videodeepam

மீண்டும் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ள கொழும்பு உள்ளிட்ட பகுதிகளின் காற்றின் தரம்

videodeepam

ஜக்கியதேசியகட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இண்று கிளிநொச்சியில் இருவேறு இடங்களில் நடைபெற்றது.

videodeepam